நடிகை இலியானா கர்ப்பம்?
பாலிவுட் நடிகை இலியானா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான இலியானா டி க்ரூஸ், தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ‘கேடி’ மற்றும் ‘நண்பன்’ படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது பாலிவுட்டில் முழுநேர நடிகையாக உள்ளார்.
இலியானாவும், வெளிநாட்டு புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபான் என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. அந்நிலையில், அவரைத் தன் கணவர் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார் இலியானா. ஆனால், இருவரும் கல்யாணம் செய்து கொண்டதிற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது இலியானா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இலியானா இது குறித்து எந்த கருத்தும் கூறவில்லை.