செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (17:09 IST)

‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரிலுக்கு கண்ணாலம்…

‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரிலுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு டான்ஸ் ஆடி, தென்னிந்தியாவையே கிறுகிறுக்க வைத்தவர் ஷெரில். ‘பிரேமம்’ மலர் டீச்சரிடம் மனதைப் பறிகொடுத்தது போல், ஷெலியிடம் மயங்கி நின்றனர் இளைஞர்கள். அவர் ஆடிய பிறகுதான் அந்தப் பாடல் பிரபலமானது.
 
இந்நிலையில், ஷெரிலுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. பிரஃபுல் டோமி என்பவருக்கும், ஷெரிலுக்கும் கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.