திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (19:10 IST)

‘சங்கமித்ரா’ ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?

சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கப் போகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.


 

 
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’. வரலாற்றுப் படமான இதை, ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஹீரோக்களாக ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் நடிக்க இருக்கின்றனர்.
 
ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருந்தார். இந்தப் படத்துக்காக வாள் சண்டை பயிற்சி பெற்ற ஸ்ருதி, திடீரென படத்தில் இருந்து விலகினார். எனவே, வேறொரு ஹீரோயினைத் தேடிவந்தனர். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ள திஷா, இந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ‘குங்பூ யோகா’ மற்றும் ‘ஜாக்கிசான்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
 
ஹீரோயின் ஒப்பந்தமானதைத் தொடர்ந்து, ‘சங்கமித்ரா’ ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது ‘கலகலப்பு 2’ படத்தின் ஷூட்டிங், வாரணாசியில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தோடு ஷூட்டிங் முடிகிறது. எனவே, அடுத்த வருட தொடக்கத்தில் ‘சங்கமித்ரா’ ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.