வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:39 IST)

வேலைக்காரன் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகிறது...

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக், இன்று மாலை வெளியாகிறது.


 

 
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வில்லனாக ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியானது. அது மாஸ் ஹிட்டானதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகிறது. இந்தப் படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகிறது.