1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (09:56 IST)

ஹீரோவாகும் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்! நாயகி யார்?

தமிழகத்தில் உள்ள நடுத்தர குடும்பத்தினர்களுக்கு சரவணா ஸ்டோர்ஸ் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு வீட்டு உபயோக பொருட்கள் முதல், பாத்திரங்கள், அணிகலன்கள், நகைகள், மளிகை சாமான்கள், மின்னணு உபகரணங்கள், காய்கறிகள் என அனைத்து பொருட்களையும் தரமாகவும் குறைந்த விலையும் வழங்கி வருகிறது.
 
இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதன் உரிமையாளர் சரவணன் அருள் நடித்து வருவது தெரிந்ததே. ஆரம்பத்தில் அவரது நடிப்பையும் நடனத்தையும் கேலி செய்த பலர், தற்போது அவரையும் ஒரு விளம்பர நடிகராக ஏற்றுக்கொண்டனர். மேலும் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் அவர் விளம்பரத்தில் நடிப்பதால் விளம்பரம் மக்களை சென்றடைந்துள்ளது
 


இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரவணன் அருள் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது ஆனால் அது வதந்தி என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சரவணன் அருள் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவருடன் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை அவரே தயாரிப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?