1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (08:10 IST)

அஜித் ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங் எப்போது?... வேலைகள் தொடக்கம்!

அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் சென்னை ஈ வி பி ஸ்டுடியோவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்குள் அஜித் விடாமுயற்சி ஷூட்டிங் முடியும் என சொல்லப்படுகிறது.