வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (18:58 IST)

குட்நைட் சொல்லி தூங்க சென்ற டிவி சீரியல் நடிகை தூக்கில் தொங்கிய மர்மம் என்ன?

சமீபகாலமாகவே இந்தியா முழுவதிலும் சினிமா நடிகைகள் மற்றும், டிவி சீரியல் நடிகைகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. திடீரென வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் குறைவது, அதிக வேலைப்பளுவால் மன அழுத்தம், காதல் தோல்வி, டார்ச்சர் போன்ற பல காரணங்கள் நடிகைகளின் தற்கொலைக்கு கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 23 வயது மெளமிதா என்ற நடிகை இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொல்கத்தா போலீசார் அவரது அறையை சோதனை செய்ததில் ஒரு கடிதத்தை கண்டெடுத்தனர். மேலும் அவரது செல்போன், சமூகவலைத்தள பக்கங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

நடிகை மெளமிதா முந்தைய நாள் இரவில் மகிழ்ச்சியுடன் குட்நைட் சொல்லிவிட்டு தூங்க சென்றதாகவும், மறுநாள் காலையில் அவர் தூக்கில் தொங்கி இறந்ததை பார்த்து தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் மெளமிதா தங்கியிருந்த வீட்டின் ஓனர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்

பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வாய்ப்புகளும் கைகொடுக்காமல் போனதாலும் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.