புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (10:58 IST)

கௌதம் மேனனையும் விடாத இரண்டாவது பாக ஆசை…. VTK படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை சமீபத்தில் பேசி முடித்தார் சிம்பு. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் படக்குழு லக்னோவில் படமாக்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஷூட்டிங் நான்கு நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்த காட்சிகளில் சிம்பு பங்கேறகவில்லை என்றும் சொல்ல்ப்படுகிறது. ஆனால் இந்த காட்சிகள் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டமாக அமையும் என சொல்லப்படுகிறது. கேஜிஎஃப், பாகுபலி போல இந்த படத்தையும் இரண்டு பாகங்களாக உருவாக்க கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.