வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (10:56 IST)

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் தெரு! – சரித்திரம் படைத்த இசைப்புயல்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவப்படுத்தும் விதமாக கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் மிகப்பெரும் இசையமைப்பாளராக உள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ்நாட்டை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தை தொடங்கினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல இந்திய மொழிகளிலும் இசையமைத்து இசைப்புயலாக உருவான ஏ.ஆர்.ரஹ்மான் “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தின் மூலமாக ஆஸ்கர் விருதை வென்று உலக அரங்கில் தமிழில் பேசி தமிழன் பெருமையை நிலைநாட்டினார்.

ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் விதமாக அவருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் கனடா அரசு புதிய கௌரவத்தை அவருக்கு வழங்கியுள்ளது. கனடாவின் மார்கம் என்ற நகரத்தி உள்ள தெரு ஒன்றிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை வைத்துள்ளது கனடா அரசாங்கம். தமிழ் இசையமைப்பாளரின் பெயர் கடல் கடந்த தூர தேசம் ஒன்றின் தெருவிற்கு வைக்கப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.