1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:52 IST)

திரையரங்கு ஊழியர்களின் வறுமையைப் போக்கிய விஜய் ரசிகர்கள்: பரபரப்பான தகவல்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் திரையரங்கு ஊழியர்களை வறுமையைப் போக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை காய்கறி பொருட்கள் மற்றும் விருந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
திரையரங்கு ஊழியர்களின் வறுமையைப் போக்கிய விஜய் ரசிகர்கள்
விருத்தாச்சலம் அருகே உள்ள திரையரங்கு ஊழியர்கள் அனைவர் குடும்பத்திற்கும் விருத்தாசலம் பகுதியில் மக்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் காய்கறி வேட்டி சேலை உள்பட அனைத்து வழங்கப்பட்டது
 
அது மட்டுமன்றி அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு மதிய விருந்தும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் திரையரங்க ஊழியர்களின் வறுமையைப் போக்கும் வகையில் இந்த உதவி செய்ததாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்