செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (17:20 IST)

ஆடுகளை திருடி கறி விருந்து வைத்த அரசியல் பிரமுகர்!

நாகை மாவட்டத்தில் இரு ஆடுகளை திருடிய அதிமுக பிரமுகர் ஒருவர் அதை கறி விருந்து செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள விளாகம் என்ற கிராமத்தில் ஒரு விவசாயில் தன் கொட்டகையில் இரவில்  ஆடுகளை கட்டிவைத்திருந்த நிலையில் காலையில் பார்க்கும் போதும் அதில் இரண்டை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் விவசாயி.

மேலும்,  அன்று அதேபகுதியில் ஒரு அதிமுக பிரமுகர் வீட்டில் ஆடு கறி விருந்து நடந்துள்ளது. அவருக்குக் கிடைத்த தகவலிம்படி இரு ஆடுகளில் ஒன்றை விற்று இந்த விருந்துக்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கியுள்ளதாக தெரிந்தது.

இதுகுறித்து விவசாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போலீஸாரிடம் அரசியல் பிரமுகர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இது குறித்து அவர்களை கண்டித்துள்ளதாகவும் , ஆடுக்கு  உரிய பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகிறது.