அமலா பாலுடன் லிப் லாக் அடித்த ரம்யா - நம்பர் ஒன் ட்ரெண்டிங் வீடியோ!

Last Updated: ஞாயிறு, 7 ஜூலை 2019 (09:22 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் ட்ரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 


 
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும்  "ஆடை"  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து. படத்தின் மீதான எதிரிபார்ப்பையும் அதிகரித்தது. அதனையடுத்து படத்திற்கு தனிக்கைக்குழு  "A" சான்றிதழ் வழங்கியது. பின்னர் வெளியான டீசர் வீடியோ அனைவரது கவனத்தையும் ஒரே நேரத்தில் திசைதிருப்பியது. ஆடையின்றி வெறும் உடம்பை காணபித்து நடித்திருந்த அமலா பால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் மக்கள் மத்தியில் இப்படம் பரவலாக பேசப்பட்டது. 
 
பெண் ஒருவர் ஆடையின்றி ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் விஜே ரம்யா அமலா பாலின் நெருங்கிய தோழியாக நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. 


 
இந்த படத்தில் தானும் நடித்துள்ளதாக பிரபல வி ஜே ரம்யா ட்வீட் செய்திருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள்’நீங்களும் ஆடை இல்லாமல் நடித்துள்ளிர்களா’ என்று கமன்ட் அடித்து வந்தனர்.  இந்த நிலையில் நேற்று வெளியான ஆடை ட்ரைலரில் ரம்யா அமலா பாலுடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளதை கண்டு ரசிகர்கள் ஷாக்காகிவிட்டனர். 

ஆடை ட்ரைலெர் தற்போது இணையத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :