புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (19:22 IST)

விவேக் படத்தின் டிரெய்லரை வெளியிட இருக்கும் பிரபலங்கள் யார் தெரியுமா?

விவேக் நடித்துள்ள எழுமின் படத்தின் டிரெய்லரை நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி இணைந்து வெளியிடுகின்றனர்.
 
வி.பி.விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவையானி இணைந்து நடித்திருக்கும் படம் எழுமீன். தற்காப்பு கலைகளை விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க துடிக்கும் சிறுவர்களை பற்றிய கதையாகும்.
 
இப்படத்திற்கு கோபி ஒளிப்பதிவு செய்ய சந்திரசேகர் இசையமைத்துள்ளார். வையம் மீடியாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தீபிகா, அழகம் பெருமாள், வினித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
இந்த படத்தின் டிரெய்லரை நடிகர்கள் கார்த்தி, விஷால் மற்றும் சிம்பு இணைந்து மே 21ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.