பாடலாசிரியர் விவேக்கிற்கு சந்தோஷ் நாராயணன் கொடுத்த பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா?

v
CM| Last Updated: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (15:48 IST)
பாடலாசிரியர் விவேக்கிற்கு, மறக்க முடியாத பிறந்த நாள் பரிசொன்றை அளித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
 
ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘வாடி ராசாத்தி’ பாடல் மூலம் கவனம் பெற்றவர் பாடலாசிரியர் விவேக். தொடர்ந்து பல படங்களில் பாடல் எழுதியுள்ள விவேக், விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
s
 
விவேக்கிற்கு நேற்று பிறந்த நாள். அதை முன்னிட்டு, மறக்க முடியாத பிறந்த நாள் பரிசொன்றை அளித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதாவது, ‘பைரவா’ படத்துக்காக விவேக் எழுதிய ‘காதல் குடில்’ பாடல் படத்தில் இடம்பெறவில்லை, ஆல்பத்தில் கூட இல்லை. அந்தப் பாடலை நேற்று வெளியிட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன்.


இதில் மேலும் படிக்கவும் :