தியேட்டருக்கு கூட்டம் வரவைக்க புது ஐடியா – தல படத்தை ரிலிஸ் செய்ய முயற்சி!

Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:57 IST)

அஜித்தின் விஸ்வாசம் படத்தை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிலீஸான படங்கள் ஒன்றும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. திரையரங்குக்கு வரும் கூட்டம் மிகவும் கம்மியாக இருப்பதால் பல இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கான கங்கா & யமுனா நிர்வாகம் விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :