தொடர்ந்து கைது செய்யும் போலீஸ்; விடாமல் பிரச்சாரம் செல்லும் உதயநிதி!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:03 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி ஈடுபடுவதாக இன்று உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையிலிருந்து 100 நாட்கள் தொடர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி இன்று மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் பிரச்சாரம் செய்ய முயன்ற உதயநிதி ஸ்டாலினை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :