செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (16:31 IST)

மறைந்த புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற நடிகர் விஷால்!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மறைந்த நிலையில் நடிகர் விஷால் அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கன்னடத்தில் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த சில தினங்கள் முன்னதாக திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலக்ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் பலர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்ற விஷால் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு தனது இரங்கல்களை தெரிவித்துக் கொண்டார்.