புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (19:22 IST)

கமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்...

கமலை போல விஷாலும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்த அளவு உண்மையானது என்பது தெரியவில்லை. 
 
கமல் வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மிகவும் வெற்றி பெற்றது. பிக் பாச் நிகழ்ச்சியை, நிகழ்ச்சியாக மட்டும் பார்க்காமல் கமல் தனது அரசியல் வாழ்கைக்கு ஒரு முன்னோட்டமாக கொண்டு சென்றார். 
 
தற்போது பிக் பாஸ் இரண்டாவது சீசனுக்கான புரமோ வெளியாகி நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசியலில் கால் பதித்துள்ள கமலுக்கு இது ஒரு அரசியல் களமாகவும் அமைந்துள்ளது. 
 
இந்நிலையில் கமலை போலவே சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை விஷால் தொகுத்து வழங்கப்போவதாக தெரியவந்துள்ளது. தெலுங்கில் நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியைப் போன்று இது இருக்குமாம். 
 
இந்த நிகழ்ச்சி வெறும் பேசுவது மட்டுமில்லாமல், கஷ்டப்படும் மக்களை முன்னேறவும், இதன் மூலம் நிதி திரட்டப்பட்டு அது உரியவர்களுக்கு வழங்கும் விதமாகவும் நிகழ்ச்சி அமைக்கப்பட உள்ளதாம்.