தன்னுடைய ரசிகர்களுக்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்

CM| Last Updated: வியாழன், 14 ஜூன் 2018 (18:56 IST)
தன்னுடைய ரசிகர்கள் சந்தோஷப்படும்படி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷால்.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். வில்லனாக அர்ஜுனும், ஹீரோயினாக  சமந்தாவும் நடித்தனர். விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
டெக்னாலஜி க்ரைம் த்ரில்லரான இந்தப் படம், மிகப்பெரிய வசூலைக் குவித்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கடந்த மே மாதம் 11ஆம் தேதி தமிழில் வெளியான  இந்தப் படம், தெலுங்கில் ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் கடந்த 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அங்கும் படம் ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது.
எனவே, இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கின்றனர். இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஷால். விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி  2’ விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :