அதர்வா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

s
Last Updated: திங்கள், 11 ஜூன் 2018 (19:20 IST)
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள செம போத ஆகாதே படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
பாணா காத்தாடி படத்துக்கு பிறகு பத்ரி வெங்கடேஷ்- அதர்வா இணையும் படம் செம போத ஆகாதே. இந்தப் படத்தில், மிஸ்தி மற்றும் அனைக்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர்,  மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்
 
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல். எடிட் செய்துள்ளார். கிக்காஸ்   எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் அதர்வாவே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். . ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்தப் படம் மே 18-ஆம் தேதி வெளியாக  இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
s
 
இந்நிலையில் இப்படம் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் படிக்கவும் :