தொடர்ந்து தோல்விப் படங்கள்… ஆனாலும் சம்பளத்தை ஏற்றிய விஷால் – இதுதான் காரணமாம்!
நடிகர் விஷால் நடித்த படங்களில் கடைசியாக வெற்றி பெற்றது இரும்புத்திரை திரைப்படம் மட்டும்தான்.
நடிகர் விஷால் நடிப்பில் இப்போது சக்ரா படத்தில் நடித்து முடித்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திலும் இப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் விஷால் தயாரித்த பல படங்கள் சரியாக போகததால் இப்போது பயங்கரமான நிதி நெருக்கடியில் இருக்கிறாராம். அதனால் அதிக படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதன் ஒரு கட்டமாக இப்போது அவர் நடித்து பெரிய வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இந்நிலையில் சமீபகாலமாக வெற்றி படங்களே கொடுக்காத விஷால் தனது சம்பளத்தில் சில கோடிகளை அதிகரித்துள்ளாராம். இதற்கு மிக முக்கியக் காரணம் அவர் நடிக்கும் படங்களின் இந்தி ரைட்ஸ் எல்லாம் 10 கோடிக்கும் மேல் விற்கப்படுகிறதாம். இந்தி டப்பிங்கில் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ள நிலையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.