திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (16:53 IST)

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார், அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு டான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்து இப்போது இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதையொட்டி கோயம்புத்தூரைச் சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கான வயது, முகத்தோற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அந்த மாதிரியானவர்கள் தங்கள் ஒரு நிமிடக் காட்சிகளை அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளனர்.