அஜித் படத்துக்கு இசையமைக்கிறாரா ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர்?

Sam CS
CM| Last Updated: சனி, 6 ஜனவரி 2018 (19:05 IST)
‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்துள்ள சாம் சி.எஸ்., அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைக்கலாம் என்று தகவல்கள் உலா வருகின்றன.

 
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்தவர் சாம் சி.எஸ். இந்தப் படத்தில் போலீஸாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். பாடல்கள் மட்டுமின்றி இந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவும் சாம் சி.எஸ். பாராட்டப்பட்டார்.
 
விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’, சாய் பல்லவியின் ‘கரு’ படங்களுக்கு இசையமைத்துள்ள சாம் சி.எஸ்., அடுத்ததாக அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிவா - அஜித் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, விரைவில் தொடங்க இருக்கிறது.
 
‘தான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன்’ என்றும், ‘விரைவில் அஜித் படத்துக்கு இசையமைப்பேன்’ என்றும் சாம் சி.எஸ். தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :