அஜித்தின் விசுவாசம்' படத்தில் சிம்பு இசையா?

Last Modified வெள்ளி, 5 ஜனவரி 2018 (22:59 IST)
சிம்பு இசையமைத்த முதல் படமான 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்கள் சுமாராகவே இருந்ததாக விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'விசுவாசம்' படத்தில் சிம்பு இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளராக யுவன், அனிருத் ஆகிய இருவரில் ஒருவர் தான் ஒப்பந்தம் செய்யப்படும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், வித்தியாசமான முயற்சியாக சிம்பு இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் ஆலோசனை செய்ததாகவும், இதுகுறித்த தகவல் மிக விரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் இன்னும் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குன சிவா உள்பட படக்குழுவினர் இறுதி செய்யவில்லை என்றும், ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளர் நிச்சயம் ஆச்சரியம் தரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :