ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:10 IST)

ஜெயம் ரவி செலவுக்கு மனைவியிடம்தான் காசு கேட்பான்… பழைய பேட்டியில் விக்ரம் சொன்னதை ட்ரண்ட் ஆக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து ஜெயம் ரவி தரப்பில் இருந்து ஆர்த்தி மற்றும் அவரது அம்மா சுஜாதா ஆகியோர் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஜெயம் ரவிக்கு என்று தனி வங்கிக் கணக்குக்குக் கூட இல்லையாம். ஆர்த்தியோடு சேர்ந்து ஜாய்ண்ட் அக்கவுண்ட் இருந்துள்ளது. அதனால் ஜெயம் ரவி தன்னுடைய கிரெடிட் கார்ட் போன்றவற்றைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் உடனே ஆர்த்திக்கு மெஸேஜ் சென்றுவிடுவாம். அவர் உடனே போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன ஷாப்பிங் செய்தீர்கள் எனக் கேட்பாராம். இதனால் அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிபோய்விட்டதாகவும் அவர் கூறியுள்ளாராம்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் கலந்துகொண்ட ஒரு உரையாடலில் விக்ரம் பேசியது இப்போது ட்ரண்ட் ஆகி வருகிறது. அதில் ”நானும் ஜெயம் ரவியும் எங்காவது வெளியில் பார்ட்டிக்கு சென்றால் அவனிடம் எப்போதாவது காசு கேட்பேன். ஏனென்றால் நான் கையில் எப்போதும் காசு வைத்திருக்க மாட்டேன். அப்போது நான் கேட்டால் என்கிட்டயும் காசு இல்ல அண்ணா என்பான். அப்புறம் அவன் மனைவியிடம் காசு கேட்டு எனக்கு வாங்கிக் கொடுப்பான்” என ஜாலியாகப் பேசியிருந்தார். இப்போது அதை எடுத்து ஜெயம் ரவிக்கு ஆதரவாகப் பரப்பி வருகின்றனர்.