1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (09:43 IST)

மனைவியின் ஓவர் கட்டுப்பாடு… மாமியாரின் நஷ்டக் கணக்கு – ஜெயம் ரவி விவாகரத்து முடிவெடுக்க இவைதான் காரணமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியினரின் இந்த பிரிவுக்கு ஆர்த்திதான் காரணம் என்றும், அவர் ஜெயம் ரவி மேல் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்து டார்ச்சர் செய்ததால்தால் இந்த முடிவை எடுத்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஜெயம் ரவி கோவாவைச் சேர்ந்த பாடகி ஒருவரோடு இப்போது டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் இந்த நெருக்கம்தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஜெயம் ரவி அதை மறுத்துள்ளார்.

இந்நிலையில் ஜெயம் ரவி தரப்பில் இருந்து ஆர்த்தி மற்றும் அவரது அம்மா சுஜாதா ஆகியோர் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஜெயம் ரவிக்கு என்று தனி வங்கிக் கணக்குக்குக் கூட இல்லையாம். ஆர்த்தியோடு சேர்ந்து ஜாய்ண்ட் அக்கவுண்ட் இருந்துள்ளது. அதனால் ஜெயம் ரவி தன்னுடைய கிரெடிட் கார்ட் போன்றவற்றைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் உடனே ஆர்த்திக்கு மெஸேஜ் சென்றுவிடுவாம். அவர் உடனே போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன ஷாப்பிங் செய்தீர்கள் எனக் கேட்பாராம். இதனால் அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிபோய்விட்டதாகவும் அவர் கூறியுள்ளாராம்.

தன்னுடைய மாமியார் குறித்து பேசும்போது தன்னை வைத்து மூன்று படங்களை எடுத்தும், மூன்றுமே நஷ்டமாகிவிட்டதாக அவர் பொய்க் கணக்கு காட்டிவிட்டார் என்றும் ஆனால் உண்மையில் அந்த படங்கள் லாபம்தான் என்றும் ஜெயம் ரவி கருதியுள்ளார். இதுபோன்ற காரணங்களால்தான் ஜெயம் ரவி மனைவியைப் பிரிய முடிவெடுத்ததாக அவர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.