புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:08 IST)

விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விக்ரம் நடிப்பில் இப்போது பொன்னியின் செலவன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அவர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது.

பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் 15 நாட்கள் தேதிகள் ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இயக்குனர் கௌதம் மேனன் – விக்ரம் ஆகிய இருவரும் சமீபத்தில் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இதனால் விரைவில் துருவ நட்சத்திரம் படம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மீதமுள்ள காட்சிகளைப் படமாக்கிவிட்டு 3 மாதங்களில் அந்த படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.