ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (09:25 IST)

தளபதி 67 படத்துல நடிக்கிறேனா?... இயக்குனர் கௌதம் மேனன் அளித்த பதில்!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு வில்லன் வேடத்தில் கௌதம் மேனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி சமீபத்தில் கௌதம் மேனன் ஒரு நேர்காணலில் பதிலளித்துள்ளார். அதில் “லோகேஷ் கூப்புட்டு இருக்காரு. ஒரு கேரக்டர் பத்தி சொல்லி இருக்காரு.” எனப் பதிலளித்துள்ளார்.