வியாழன், 7 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (09:28 IST)

‘விக்ரம்’ தெலுங்கு விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… வெளியான அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக எகிறியுள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.  மலையாள உரிமையை சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார்.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ள நிலையில் மலையாள உரிமையை மட்டும் ஆசியாநெட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது விக்ரம் படத்தின் வட இந்திய விநியோக உரிமையை ’பென் மருதூர் சினி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது விக்ரம் திரைப்படத்தின் தெலுங்கு மொழிக்கான விநியோக உரிமையை Shresth Movies நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.