திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 19 மே 2022 (23:54 IST)

’விக்ரம்’ 3ஆம் பாகத்தில் சூர்யா: கமல்ஹாசன் அறிவிப்பு!

vikram
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் வரும் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த  நிலையில் ’விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அதில் சூர்யாதான் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார்.
 
தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று உள்ள கமல்ஹாசன் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அப்போது விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் சூர்யா வருவார் என்றும் அவருடைய கேரக்டர் தான் கதையை அடுத்த பாகத்துக்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தார்
 
விக்ரம் படத்தின் மூன்றாவது படத்தில் சூர்யா தான் கதையின் நாயகனாக இருப்பார் என்றும் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது