1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (07:56 IST)

புத்தாண்டு ஸ்பெஷல்: விக்ரமின் ‘மகான்’ படத்தின் சூப்பர் ஸ்டில் வெளியீடு

புத்தாண்டு ஸ்பெஷல்: விக்ரமின் ‘மகான்’ படத்தின் சூப்பர் ஸ்டில் வெளியீடு
இன்று புத்தாண்டு உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவதை அடுத்து சீயான் விக்ரம் நடித்து முடித்துள்ள ‘மகான்’ படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்று சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் 
 
இந்த ஸ்டில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. 
 
இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்றை சரியாக புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் பட குழுவினர் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.