செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (11:29 IST)

”நேரம் இருந்திருந்தா விக்ரம்’ல இத சிறப்பா செஞ்சிருப்பேன்” ரசிகரின் கேள்விக்கு லோகேஷ் பதில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை கமல் படங்கள் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த வெற்றியின் பூரிப்பில் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர் “படம் பார்த்த பின்னர் தற்போது உங்களுக்கு படத்தில் ஏதாவது ஒன்று இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறதா” என்று கேட்டார்.

அவருக்கு பதிலளித்த லோகேஷ் “நேரம் இருந்திருந்தால் நாங்கள் VFX-ஐ இன்னும் சிறப்பாக கொடுத்திருப்போம்” என பதிலளித்துள்ளார்.