1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (10:38 IST)

ரசிகர்களுடன் ஃபர்ஸ்ட் ஷோ: சய்லெண்ட் கில்லர் விஜய்!!

தேவி திரையரங்கில் காலை 7 மணி காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார் நடிகர் விஜய்.

 
மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும் மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. அதில் முதல் பாதி சிறப்பக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக நீளாமாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் வசூல் அளவில் மாஸ்டர் திரைப்படம் வெற்ற்கிகரமாகவே திகழ்கிறது. 
 
கொரோனா பொதுமுடக்கத்துக்கு மத்தியில் மாஸ்டர் வெளியான நிலையில், விஜய் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்ப்பாரா என பலரும் கேள்வி எழுப்பினர். படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்கும் படி கோரிக்கை வைப்பதாகவும் கூறினார். 
 
படம் வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் காலை 7 மணி காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார் நடிகர் விஜய் என்ற தகவல் தேவி திரையரங்கின் சிசிடிவி வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. எந்த ஆரவாரமும் இன்றி சய்லெண்ட்டாய் விஜய் இந்த காரியத்தை செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.