கணவருடன் பொங்கல் வைத்து மகிழ்ந்த நடிகை நமீதா!
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது. பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார்.
இந்நிலையில் தற்போது தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு "அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!" என ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.