1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (17:58 IST)

மாஸ்டர் vs மான்ஸ்டர்: செகண்ட் லுக்-க்கில் என்ன எதிர்ப்பார்க்கலாம்?

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் செக்ண்ட் லுக் வெளியாக கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 64வது படத்திற்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஃபஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது. 
 
இந்நிலையில் படத்தின் செக்கெண்ட் லுக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு செக்ண்ட் லுக் வெளியாக கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்த செக்கெண்ட் லுக்கில் விஜய் vs விஜய் சேதுபதியின் புகைப்படம் அல்லது படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் குறித்த புகைப்படம் வெளியாகளாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.