1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:40 IST)

’பேட்ட’ ஜித்து செம கெத்து - விஜய் சேதுபதி வேற லெவல்!

"பேட்ட" படத்தில் விஜய் சேதுபதி கேரக்டர் குறித்து சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
 
வரும் பொங்கலுக்கு ‘பேட்ட’ படம் வெளிவருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ பாடல் நேற்று வெளியாகி, அனைவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஜினி படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். 
 
மரண மாஸ் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் மிகவும் சிறப்பான எழுதப்பட்டுள்ளது. சென்னைத் தமிழில் செம குத்துப் பாடலாக "மரண மாஸ்"உருவெடுத்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், பேட்ட படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் "ஜித்து" என்று சன் பிச்சர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது