Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி

imaikkaa nodikal
Last Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (22:36 IST)
நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நயன்தாரவுடன் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்திற்காக கவுரவ வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய்சேதுபதி நடித்திருந்த படம் நானும் ரவுடி தான். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
இதனையடுத்து கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் படம் இமைக்கா நொடிகள். டிமாண்டி காலணி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, இப்படத்தை இயக்குகிறார். நயன்தாரா, அதர்வா மற்றும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் இப்படத்தில்  நடித்து வருகின்றனர்.
 
தற்போது இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :