Widgets Magazine

முடிவுக்கு வந்தது சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’

C.M.| Last Updated: சனி, 23 டிசம்பர் 2017 (15:03 IST)
சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங், நேற்று முடிவு பெற்றுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
பொங்கலுக்கு படம் ரிலீஸ் என அறிவித்து, வேகவேகமாக பணிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றுடன் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இன்னும் ஒன்றரை மாதங்களே இருப்பதால்,  போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :