வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (18:18 IST)

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. நாயகி இவர் தான்..!

விஜய் சேதுபதி நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருவதாகவும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படம் குறித்த அறிவிப்பை பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சில சுவாரசியமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் உறுதி என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஒரு மலையாள படத்தில் இணைந்து நடித்த நிலையில் தமிழில் முதல் முறையாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கிய பாண்டிராஜ் அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் இயக்காத நிலையில் தற்போது தான் தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva