1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (12:55 IST)

உதயநிதிக்காக குரல் கொடுத்த விஜய் சேதுபதி

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்திற்காக வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

 

 கெளரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’. உதயநிதி ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்தில், சில பின்னணிக் காட்சிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இயக்குநரின் குரலாக அது படத்தில் ஆங்காங்கே இடம்பெறுகிறது. இதற்கான வாய்ஸ் ரெக்கார்டிங் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. டிரெய்லரில் கூட அந்த வாய்ஸ் இடம்பெற்றுள்ளது.