வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2017 (13:26 IST)

விஜய் சேதுபதிக்கு ஜோடியானார் எமி ஜாக்சன்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’ படத்தில், அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

 
 
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘ஜுங்கா’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திலும் விஜய் சேதுபதி தான் ஹீரோ. ‘விக்ரம் வேதா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், வெளிநாட்டில் வாழும் ஸ்டைலிஷ் டான். 
 
ஸ்டைலிஷ் டானுக்கு ஜோடியாக, ஸ்டைலிஷான எமி ஜாக்சன் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்கும் சித்தார்த் விபின் தான் இசையமைக்கிறார்.