இயக்குனர் சேரனுக்கு உதவிய விஜய்சேதுபதி!
சேரனின் புதிய படத்தை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அறிவிக்கவுள்ளார்!
பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து என தனது சிறந்த படைப்புகளுக்காக தேசிய விருது பெற்றவர் இயக்குநர் சேரன்.
இவர் கடைசியாக 'ஜே.கே. எனும் நண்பனின் காதலி' என்ற படத்தை 2015-ல் இயக்கியிருந்தார்.அதன் பிறகு வேறெதும் படங்கள் இயக்காமல் இருந்த இவர், தான் ஒரு புதிய படத்தை இயக்கி முடித்திருப்பதாகவும், அதனை 12-ம் தேதி அறிவிப்பதாகவும் சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சேரனின் புதிய படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை நடிகர் விஜய் சேதுபதி, நாளை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.
சேரனின் இந்தப் படத்தை 'ப்ரெனிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடேட்' நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.