செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (08:51 IST)

சாமியார் கெட்டப்பில் விஜய்சேதுபதி: லீக் ஆன புகைப்படத்தால் அப்செட்டான படக்குழுவினர்

`சயீரா நரசிம்மரெட்டி’ படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளனர்.
 
வருடத்தில் அதிக படம் கொடுக்கும், அதிலும் அதிக ஹிட் கொடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி,  தெலுங்கில் சிரஞ்சீவியின் வரலாற்று படமான `சயீரா நரசிம்மரெட்டி’ படத்தில் நடித்து வருகிறார்.   சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண், பல கோடி செலவில் தயாரித்து வருகிறார். 
 
இந்தப்படத்தில் நயன்தாரா, ஜெகபதி பாபு, தமன்னா, `நான் ஈ' சுதீப் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உள்பட பலரும் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம்  உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் படம் தயாராகி வருகிறது. இது விஜய் சேதுபதி தெலுங்கில் நடிக்கும் முதல் படமாகும்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய் சேதுபதியின், கெட்டப்பை யாரோ சிலர் படம்பிடித்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதுவரை விஜய் சேதுபதியின் கெட்டப்பை பற்றி கடுகளவும் கசியவிடாத படக்குழு இந்த சம்பவத்தால் கடும் அப்செட்டிற்கு ஆளாகியுள்ளனர். விஜய் சேதுபதியில் கெட்டப்பை பார்த்தால் அவர் சாமியாராக நடித்திருக்க வாய்ப்பிருக்கும் போலும்.