1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2024 (08:31 IST)

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் ரிலீஸூக்குப் பிறகு படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியிலும் படம் ரிலீஸாகவில்லை. படத்தின் மீது இருக்கும் எதிர்மறை இமேஜால் ஓடிடி நிறுவனங்கள் அந்த படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் இந்த படம் குறித்து சில மாதங்களுக்கு முன்னர் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,”லால் சலாம் படத்தின் இயக்குனர் கட் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும். தொலைந்துபோன காட்சிகளை எல்லாம் கண்டுபிடித்து அதில் சில காட்சிகளை சேர்த்துள்ளோம். தியேட்டரில் பார்த்ததை விட இந்த வெர்ஷன் வேறு விதமாக இருக்கும். இதுதான் நான் உருவாக்கிய கதைப்படி இருக்க வேண்டிய படம்” எனக் கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை படம் ஓடிடியில் ரிலீஸாகவில்லை. ஆனால் தற்போது படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. வழக்கமாக படங்கள் ஓடிடியில் ரிலீஸான பின்னர்தான் HD தரத்திலான பிரிண்ட்கள் இணையத்தில் வரும்.