வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (15:26 IST)

அறிமுகம் செய்தவருக்கே போக்கு காட்டும் ஹீரோ… அப்செட் ஆன குடும்ப செண்ட்டிமெண்ட் இயக்குனர்

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் பாண்டிராஜ்.

தன்னுடைய வம்சம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சிவகார்த்திகேயன் கலகலப்பாக தொகுத்து வழங்கியதைப் பார்த்த பாண்டிராஜ், அவருக்கு மெரினா படத்தில் வாய்ப்பளித்தார். அந்த படத்துக்குப் பிறகு மீண்டும் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்திலும் நடிக்க வைத்தார்.

ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அசுரத்தனமாக சென்றதும், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அந்த படமும் ஹிட் படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது பாண்டிராஜ் மீண்டும் ஒரு கதையோடு சிவகார்த்திகேயனை அணுக, இப்போது தான் பிஸியாக இருப்பதாக சொல்லி பாண்டிராஜை கழட்டிவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இயக்குனர் பாண்டிராஜ் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.