1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (14:31 IST)

பிரபல இயக்குனருடன் கைகோர்த்த விஜய்யின் தம்பி !

vikranth
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விக்ராந்த். இவரது அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

 நடிகர் விஜய்யின்  தம்பி விக்ராந்த். இவர் கடந்த 2005  ஆம் ஆண்டு ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் கற்க கசடற என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பின், நினைத்து  நினைத்து பார்த்தேன்,  முதல் கனவே, நெஞ்சத்தைக் கிள்ளாதே, எங்கள் ஆசான், ராசு மதுரவன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு  விஷால் நடிப்பில் உருவான பாண்டிய நாடு படத்தில் அவரது நண்பனாக நடித்து அசத்தினார்.

ஒரு  ஹிட் கொடுக்க போராடி வரும் விக்ராந்த் தற்போது, பொது நல நோக்குடன் உருவாகவுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை  தொட்டுவிடு தூரன் என்ற படத்தை இயக்கி நாகேஸ்வரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் டிக்கிலோனா நடிகை ஷிரின் கஞ்ஸ்வாலா நடிக்கவுள்ளார். இவர்களுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். ஆக்சம் மற்றும் குடும்பப்படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு யுகபாரதி பாடல் எழுதவுள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.