விஜய் - கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ் காட்சி எங்கு படமாக்கப்பட்டது தெரியுமா?
‘தளபதி 62’ படத்துக்காக விஜய் - கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ் காட்சி படமாக்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் படம் ‘தளபதி 62’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தொடங்கியது. அதன்பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொல்கத்தாவில் நடைபெற்றது. ஆக்ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு செண்டிமெண்டாக விஜய் - கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. குன்றத்தூர் மெயின் ரோடு கோவூரில் அமைந்திருக்கும் மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.