வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (20:30 IST)

விஜய் பிறவியிலேயே டான்ஸர்! மனம் திறந்து பாராட்டிய அஜித்!

தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித், விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது படங்கள் வெளியாகும் தினம், தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டரில் மோதிக்கொள்ளாத நாளே இல்லை. இருதரப்பினர்களும் சிலசமயம் எல்லை மீறி ஆபாசமாக ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்தும் உண்டு
 
ஆனால் ரசிகர்கள் இவ்வாறு மோதிக்கொண்டாலும் அஜித், விஜய் இருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்கள் என்பது இருவருக்கும் நெருக்கமானவர்களுக்கு தெரியும். அந்த வகையில் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அஜித் கேரவனில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாராம். அப்போது டிவியில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் பாடல் ஒன்று ஒளிபரப்பானதாகவும், அந்த பாடலில் விஜய்யின் டான்ஸை பார்த்த அஜித், 'இவர் ஒரு பிறவி டான்ஸர் என்றும் கஷ்டமான ஸ்டெப்ஸ்களை கூட எவ்வளவு அசால்ட்டாக ஆடுகிறார் என்றும் அருகில் இருந்த நடிகர் ரமேஷ் திலக்கிடம் கூறினார். இதனை தற்போது ரமேஷ் திலக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.,

அஜித், விஜய் போலவே அவர்களது ரசிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது