புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 16 பிப்ரவரி 2019 (11:34 IST)

தல 59 படத்தில் அஜித்தின் கெட்டப் இதுதான் ! வைரல் புகைப்படம் இதோ!

நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு அவரது கணவர் போனிகபூர் தயாரிக்கும் பிங்க் ரீமேக் படத்தில் அஜித் நடிக்கிறார் . இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ "தீரன் அதிகாரம் ஒன்று" போன்ற வெற்றி படங்களின் இயக்குனரான எச். விநோத் இயக்குகிறார்.


 
படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் யுவன் இசையமைக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யா பாலன் போன்ற நட்சத்திர பட்டாளமே தல அஜித்துடன் இணைந்து நடிக்கின்றனர். 
 
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படும் என்றும் அதில் அஜித் மற்றும் வித்யா பாலனுக்கான போஷன் படமாக்கப்படவுள்ளது எனவும் கூறப்பட்டது 


 
அந்தவையில்  தற்போது படத்தில் தல அஜித்தின் கெட்டப் இதுதான் என்று கூறி அஜித்தின் நியூ லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.



இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்,  சமீபத்தில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் காரியத்தில் பங்கேற்ற அஜித் இதே கெட்டப்பில் தான் இருந்தார் என்பது குறிப்படத்தக்கது. இருந்தாலும் படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பது நலம்.