வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (19:52 IST)

''துணிவு'' படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்!

Thunivu
போனி கபூர்- ஹெச்.வினோத்-  நடிகர் அஜித்குமார் கூட்டணியில் 3 வதாக உருவாகியுள்ள படம் துணிவு.

நடிகர் அஜித்துடன் இணைந்து  மஞ்சு வாரியர்,  சமுத்திரகனி  உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு பட டிரெயிலர் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
 பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த  நிலையில், துணிவு படம் தெலுங்கில் தேகிம்பு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தை விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜுதான் ஆந்திராவில்  இரண்டு பகுதிகளில் வெளியிடுகிறார்.

அதேபோல், துணிவு படத்தை வி நியோகத்தை செய்ய உரிமை பெற்றுள்ள ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழகத்தில் நாங்கு இடங்களில் வாரிசு படத்தை வெளியிடுகிறது.

சமீபத்தில், விஜய் தமிழ் சினிமாவில்  நம்பர் 1 என்று தில் ராஜூ பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.